டெல்லி: வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.
எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி திமுக உள்ளிட்ட கட்சிகளும் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக அறிவித்து உள்ளன. மேலும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும், இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ளன.
இந்நிலையில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
The post வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை appeared first on Dinakaran.