மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தால் வெடித்த வன்முறையில் தந்தை – மகன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் முர்ஷிதாபாத்தின் நிம்திதா, ஷம்ஷெர்கஞ்ச், ஜாங்கிபூர், சுதி, ஜாஃப்ராபாத் ஆகிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் மீது கல் வீச்சு தாக்குதல், பொது சொத்துகள் சேதம். இதில் 18 போலீசார் படுகாயம். இதனையடுத்து, வக்ஃப் திருத்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் இச்சட்டம் அமல்படுத்தப்படாது என முதல்வர் மம்தா திட்டவட்டம்.
The post வக்ஃப் சட்டத்துக்கு எதிராக வெடித்த வன்முறை; கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.