டெல்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வரம் நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
கடும் எதிர்ப்புகளை மீறி வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதன் பிறகு வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பலதரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேரடியாக ஆஜராகி வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளார்.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சட்டசபையிலும் மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆ.ராசா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.