புதுடெல்லி: வக்பு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், திமுக தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ”வக்பு சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் மத உரிமையை பறிக்காது என்ற ஒன்றிய அரசின் பதில் வாதங்கள் உண்மைக்கு புறம்பானது.ஆகும். இந்த சட்ட திருத்தம் வகுப்பு சொத்துக்களை கைப்பற்றும் விதமாகவே உள்ளது. இஸ்லாமிய மதத்தின் சட்டம், அவர்களின் உரிமையை ஒழிக்கும் விதமாக உள்ளது.
குறிப்பாக வக்பு சட்டத் திருத்தம் அரசியலமைப்பு வழங்கி இருக்கக்கூடிய அடிப்படை உரிமையான மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதற்கான உரிமைக்கு எதிராகா இருக்கிறது. இதனை வழக்கின் விசாரணையின் போது எங்களது தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்தோம். எனவே இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரிப்பது மட்டுமில்லாமல், வக்பு வாரிய புதிய சட்டத் திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதனை ரத்து செய்ய வேண்டும். ஏனெனில் இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வக்பு சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.