கோவையில் மருதமலை அடிவாரத்தில், உடல் நலக்குறைவால் கர்ப்பிணி யானை உயிரிழந்ததற்கு, பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதும் முக்கியக் காரணமெனத் தெரியவந்துள்ளது. மருதமலை, வெள்ளியங்கிரி போன்ற வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஆன்மிக சுற்றுலாத்தலங்களில், அளவு கடந்த பிளாஸ்டிக் பயன்பாடு, யானை உள்ளிட்ட காட்டுயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.