டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் நடிப்பில் வெளியான மலையாள படம், ‘ஐடென்டிட்டி’. அகில் பால் மற்றும் அனஸ் கான் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் தமிழிலும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
நடிகை த்ரிஷா பேசும்போது, “மலையாளப் படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக இருக்கின்றன. எனக்கு மலையாளப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அங்கு வருடத்துக்கு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தின் திரைக்கதை புத்திசாலித்தனமானது.