புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வுத்துறையின் 150வது நிறுவன நாள் விழாவில் உலக வானிலை அமைப்பின் தலைவர் கிளஸ்டோ சவ்லோ கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து பேட்டி ஒன்றில் செலஸ்டோ சவ்லோ கூறுகையில், “அனைத்து துறைகளிலும் வானிலை மற்றும் காலநிலை சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தளவாடங்கள், போக்குவரத்து, சுற்றுலா, எரிசக்தி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் வானிலை மற்றும் காலநிலை சேவை அவசியமாகின்றது.
இந்தியா இதற்கு உதாரணமாகும். இந்தியா போன்று இல்லாமல் பல வளரும் நாடுகள் இந்த சேவைகளை இன்றும் அவற்றின் பல்வேறு துறைகளில் முழுமையாக ஒருங்கிணைக்கவில்லை. காற்று, சூரிய சக்தி மற்றும் நீர் மின்சாரம் -புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பற்றி நீங்கள் சிந்தித்தால் அவை அனைத்தும் வானிலை சார்ந்தவை. ஆற்றல் மாற்றத்துக்கு வலுவான வானிலை சேவை தேவையாகும். இந்திய வானிலை ஆய்வுத்துறைக்கு நன்றி” என்றார்.
The post வலிமையான வானிலை சேவைகள்; வளரும் நாடுகளுக்கு இந்தியா உதாரணம்: உலக வானிலை அமைப்பின் தலைவர் கருத்து appeared first on Dinakaran.