இம்முறை புதுச்சேரியில் காங்கிரஸ் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் பேசி வரும் நிலையில், இரண்டு கட்சிகளுக்குமான உரசலும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் – திமுக கூட்டணி போட்டியிட்டது.
30 தொகுதிகளிலும் போட்டியிட்ட இந்தக் கூட்டணியால் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெறமுடிந்தது. திமுக 6 இடங்களை பிடித்த நிலையில் திமுக-வை விட கூடுதலான இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 2 இடங்களை மட்டுமே வென்றது. இதனால், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியானது திமுக.