டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் முதல்முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி
உரையாற்றி வருகிறார். அதில்; “தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒரே நேரத்தில் நிகழ்த்த முடியாது. அதேபோல் தான் தீவிரவாத்தையும் வணிகத்தையும் ஒரே நேரத்தில் நிகழ்த்த முடியாது. பாகிஸ்தான் உயிர்த்திருக்க வேண்டுமென்றால் தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்க வேண்டும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுமானால் தீவிரவாதம், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே நிகழும். இது போருக்கான காலமல்ல; அதே நேரத்தில் தீவிரவாத செயல்களுக்கான காலமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வளர்ந்த இந்தியா என்ற கனவு நிச்சயம் நிகழும்; அதற்கான வலிமையை இந்தியா நிகழ்த்திக் காட்டியுள்ளது ” என பிரதமர் உரசாயாற்றினார்.
The post வளர்ந்த இந்தியா என்ற கனவு நிச்சயம் நிகழும்; அதற்கான வலிமையை இந்தியா நிகழ்த்திக் காட்டியுள்ளது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.