புதுடெல்லி: தேர்தல் நாளன்று வாக்காளர்களின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடியில் இருந்து 200மீட்டர் தொலைவில் அதிகாரப்பூர்வமற்ற வாக்காளர் அடையாள சீட்டுக்களை வாக்காளர்களுக்கு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இதுவரை வழங்கி வந்தனர்.
ஆணையத்தின் புதிய முடிவின்படி இந்த தூரமானது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அதிகாரப்பூர்வமற்ற வாக்காளர் அடையாள சீட்டுக்களை விநியோகிப்பதற்கு அனுமதிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மொபைல் போன் டெபாசிட் கவுன்டர்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
The post வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரம்வரை அரசியல் கட்சியினர் வாக்காளர் அடையாள சீட்டு வழங்க அனுமதி: தேர்தல் ஆணையம் முடிவு appeared first on Dinakaran.