மும்பை: லார்சன் அண்ட் டூப்ரோ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன், தனது ஊழியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் உரை வெளியானது. அதில் அவர், ‘ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க என்னால் முடியவில்லை என்று வருந்துகிறேன். வீட்டில் ஓய்வு எடுப்பதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது. நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? மனைவிகள் எவ்வளவு நேரம் கணவனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்’ என்று கூறினார்.
லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் கூறிய கருத்து அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியனின் கருத்து குறித்து வெளியிட்ட பதிவில், ‘இவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதர், இதுபோன்ற கருத்துகளை கூறியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது’ என்று கூறியது மட்டுமின்றி மனநல விஷயங்கள் என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.
The post வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பெரிய மனுசன் பேசுற பேச்சா இது? நடிகை தீபிகா படுகோன் ஆவேசம் appeared first on Dinakaran.