குளச்சல்: குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீனவர் கிராமத்தில் உள்ள தனியார் மீன்பிடி துறைமுகத்தில் கடியப்பட்டணத்தை சேர்ந்த அருள்ரமேஷ் (50) என்பவரின் விசைப்படகில் 21 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். முட்டத்தை சேர்ந்த லாரன்ஸ் (35) படகை ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து 22 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பெரிய சரக்கு கப்பல் விசைப்படகு மீது உரசிவிட்டு சென்றது. இதில் படகின் பின் பகுதியில் இருந்த கேரஸ் உடைந்து சேதம் அடைந்தது. யாரும் காயமின்றி தப்பினர். பின்னர் மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரை திரும்பினர்.
The post விசைப்படகு மீது சரக்கு கப்பல் உரசல்: 22 மீனவர்கள் தப்பினர் appeared first on Dinakaran.