டெல்லி : விடுமுறை நாளில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வேதனை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு முன்பு நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்குப் பிறகு மனுவை பட்டியலிடுமாறு நீதிபதி அமர்விடம் கோரிக்கை வைத்தார்.
இதைக்கேட்டு கோபம் அடைந்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,” வழக்கறிஞர்கள் விடுமுறை நாட்களில் வேலை செய்ய விரும்புவதில்லை. ஆனால், வழக்குகள் தேங்குவதற்கு நீதித் துறைதான் காரணம் என்று
பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது .விடுமுறை காலத்தில், முதல்முறையாக 5 நீதிபதிகள் அமர்வு பணியாற்றுகிறது. ஆனால், வழக்குகள் நிலுவைக்கு நாங்கள்தான் காரணம் என்கின்றனர். உண்மையில் விடுமுறை நாளில் வேலை செய்ய விரும்பாத வழக்கறிஞர்கள்தான் அதற்கு காரணம்,” இவ்வாறு பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
The post விடுமுறை நாளில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆதங்கம்!! appeared first on Dinakaran.