டெல்லி: வீட்டுப் பணி பெண்கள் பாதுகாப்புக்கு சட்டம் இயற்ற ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வீட்டுப் பணி பெண்களின் சட்டப் பாதுகாப்பு, பணி விதிகள் வகுப்பது தொடர்பாக குழு அமைக்க உத்தரவு அளித்துள்ளது . வீட்டுப் பணி பெண்கள் சுரண்டல், பாலியல் அத்துமீறல், கடத்தலுக்கு உள்ளாகும் சூழல் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு அமைக்கும் குழு 6 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
The post வீட்டுப் பணி பெண்கள் பாதுகாப்புக்கு சட்டம் இயற்ற ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.