புவனேஸ்வர்: ஒடிசாவில் வெயில் தாக்கத்தால் பள்ளி நேரத்தை மாற்றம் செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்று வரும் சூழலில் கட்டாயம் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. அங்குள்ள போலாங்கிர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 104.5 டிகிரியும், பவுத் மாவட்டத்தில் 104 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக பள்ளி நேரத்தை மாற்றி அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
The post வெயில் தாக்கம் எதிரொலி.. ஒடிசாவில் இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்..!! appeared first on Dinakaran.