புதுடெல்லி: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த புகார் குறித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதால், உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையிட்டார். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எந்தவித விசாரணை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டனர்.
The post வேட்புமனுவில் தகவல் மறைத்த விவகாரம் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.