டெல்லி: வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பளம் அதிகரிக்கவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொழிலாளர்களின் தரவுகளை ஆய்வு செய்தபோது கடந்த 7 ஆண்டுகளில், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன, ஆனால் தொழிலாளர்களின் சம்பளம் பணவீக்கத்துக்கு ஏற்ப உயரவில்லை. இதற்கு திறன் குறைவே காரணம். திறன் அதிகரிக்கும்போதுதான், உற்பத்தி அதிகரிக்கும், ஊதியமும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
The post வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பளம் அதிகரிக்கவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி கருத்து appeared first on Dinakaran.