ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லும் விமானக் கட்டணத்தை விமான நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. விமான கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என அமைச்சர் வேண்டுகோள் விடுத்த பிறகும் கட்டணம் உயர்ந்துள்ளது. ஸ்ரீநகர்-டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் ரூ.11,000 முதல் ரூ.13,000 வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் ரூ.21,000 முதல் ரூ.23,000 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் விமான தேவையும் இல்லாததால் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.
The post ஸ்ரீநகர் -டெல்லி விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு: விமான நிறுவனங்கள் appeared first on Dinakaran.