தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் 30 ஆண்டாக வந்துசெல்லாத பேருந்து ஒரே நாளில் ஆட்சியர் தீர்த்து வைத்துள்ளார். உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் தூத்தக்குடி ஆட்சியர் தங்கி குறைகளை கேட்டறிந்தார். ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்துக்குள் பெரும்பாலான பேருந்துகள் வந்துசெல்வதில்லை என பொதுமக்கள் புகார் கூறினர். ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லாத 6 பேருந்துகளுக்கு ஆட்சியர் தலா ரூ. 10,000 அபராதம் விதித்தார். ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்துக்கு வராத பேருந்துகளின் பர்மிட் சஸ்பெண்ட் ஆகும் என ஆட்சியர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்தார். 30 ஆண்டுகால பிரச்சனைக்கு ஒரே நாளில் தீர்வு கண்ட தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத்துக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
The post ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் 30 ஆண்டாக நுழையாத பேருந்து: ஒரே நாளில் தீர்வு appeared first on Dinakaran.