புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனையான வந்தனா கட்டாரியா நேற்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய, மாநில அணிகள் சார்பில் ஹாக்கி விளையாடி வந்தவர் வந்தனா கட்டாரியா. இந்தியாவுக்காக இதுவரை 320 ஹாக்கி போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 158 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார்.