புதுடெல்லி: இந்தாண்டு ஹஜ் பயணத்துக்கான ஒதுக்கீடு 1,75,025 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவும், சவுதி அரேபியாவும் நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தாண்டு ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களின் புறப்பாடு ஏப்ரல் 29 முதல் மே 30 தேதிகளுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஹஜ் செல்ல 1,75,025 பேருக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்தது. நடப்பாண்டில் மேலும் 10,000 பேருக்கு அனுமதி வழங்குமாறு சவுதிக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.
ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ 5 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.இந்த நிலையில், சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பீக் பின் பவ்சான் அல் ரபியாவை ஒன்றிய அமைச்சர் ரிஜிஜூ நேற்று சந்தித்து பேசினார். அப்போது இதற்கான ஒப்பந்தத்தில் இரு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர். இது குறித்து ரிஜிஜூ எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,2025 ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 யாத்ரீகர்களின் ஒதுக்கீட்டை இறுதி செய்துள்ளோம். என குறிப்பிட்டுள்ளார்.
The post 1.75 லட்சம் பேருக்கு ஹஜ் பயண அனுமதி: சவுதியுடன் இந்தியா ஒப்பந்தம் appeared first on Dinakaran.