சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் 56-வது ஏஎல் முதலியார் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த டி.லதா பந்தய தூரத்தை 37:34.3 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். வட்டு எறிதலில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த ஷாலு ரேகானா 41.41 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார்.
100 மீட்டர் ஓட்டத்தில் எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.கிருத்திகா பந்தய தூரத்தை 11.4 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். எம்ஓவி வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த ஆர்.அபிநயா 11.7 விநாடிகளில் இலக்கை எட்டி 2-வது இடமும், எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த தீப லட்சுமி (11.8) 3-வது இடமும் பிடித்தனர்.