புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005, திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள வயதுவந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.