புதுடெல்லி: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128வது பிறந்ததினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2022ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், ‘பராக்கிரம தினமான இன்று, சுபாஷ் சந்திர போசுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. அவர் துணிச்சலையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினார். அவர் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்ப நாம் பாடுபடும்போது அவரது தொலைநோக்கு பார்வை நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
The post 128வது பிறந்த தினம்: சுபாஷ் சந்திரபோஸ் படத்துக்கு மலர் தூவி பிரதமர் மரியாதை appeared first on Dinakaran.