புதுடெல்லி: மணிப்பூர் முழுவதும் வரும் 1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. அதன்படி மணிப்பூரில் 13 காவல்நிலைய எல்லைகளை தவிர மாநிலம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிக்கப்படுகிறது.
இதேபோல், அருணாச்சலபிரதேசத்தின் திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் மாவட்டங்களிலும், நம்சாய் மாவட்டத்தில் உள்ள மூன்று காவல்நிலைய எல்லை பகுதிகளிலும் இந்த சட்டம் நீட்டிக்கப்படுகிறது. மேலும் நாகலாந்தில் 8 மாவட்டங்கள், 5 மாவட்டங்களில் உள்ள 21 காவல்நிலைய எல்லை பகுதிகளில் 6 மாதங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 13 காவல்நிலைய எல்லைகளை தவிர மணிப்பூர் முழுவதும் சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிப்பு appeared first on Dinakaran.