‘ரெட்ரோ’ படத்தில் 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறது படக்குழு.
‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டேவின் நடனம் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலை ஒட்டி 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு. ‘கனிமா’ பாடலைத் தொடர்ந்து சண்டைக் காட்சி, அதனைத் தொடர்ந்து ஒரு காட்சி என 15 நிமிடத்துக்கு ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்கள்.