திருமலை: கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி விஜயேசன் ரெட்டி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை காலை 11 மணிக்கு முன் மற்றும் இரவு 11 மணிக்கு பின் நடைபெறும் சினிமா காட்சிகளை பார்க்க தியேட்டரில் அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
The post 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இரவில் தியேட்டர் செல்ல தடை: தெலங்கானா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.