இஸ்லாமாபாத்: இந்தியா,பாகிஸ்தான் இடையே போர் நீடித்து இருந்தால் மிகவும் ஆபத்தாக முடிந்து இருக்கும் என்று பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடியாக பாக். மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகள் இடையே 4 நாள் போர் வெடித்தது. இருதரப்பினரும் மே 10 அன்று மாலை போர் நிறுத்தம் செய்தனர். இதுபற்றி பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில்,’பஹல்காம் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிலைமை எந்த நேரத்திலும் மிகவும் ஆபத்தான திருப்பத்திற்கு சென்று இருக்கலாம்.பஹல்காம் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருந்தது. ஆனால் அதற்கு ஒப்புக்கொள்வதற்கு பதிலாக, இந்தியா பாகிஸ்தானைத் தாக்கியது, அதற்கு தகுந்த முறையில் பதிலடி கொடுக்கப்பட்டது. 1971 போரில் ஏற்பட்ட தோல்விக்கு பாகிஸ்தான் பழிவாங்கியது’ என்றார்.
The post 1971 தோல்விக்கு பழிவாங்கி விட்டோம் போர் நீடித்து இருந்தால் ஆபத்தாக முடிந்திருக்கும்: பாக். பிரதமர் சொல்கிறார் appeared first on Dinakaran.