சண்டிகர்: பஞ்சாபில் போலி என்கவுன்டர் வழக்கில் இரண்டு முன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அமிர்தசரசில் மஜிதாவில் உள்ள சன்சாரா கிராமத்தில் நடந்த போலி என்கவுன்டரில் பல்தேவ் மற்றும் லக்விந்தர் ஆகிய இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது ஹர்பஜன் மற்றும் மொஹிந்தர் உட்பட பல குற்றவாளிகள் இறந்துவிட்டனர்.
இந்த போலி என்கவுன்டர் வழக்கில் முன்னாள் இன்ஸ்பெக்டர் குர்பிந்தர் சிங் மற்றும் முன்னாள் உதவி ஆய்வாளர் பர்ஷோத்தம் சிங் ஆகியோர் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பஞ்சாப் காவல்துறையை சேர்ந்த இரண்டு முன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
The post 1992ம் ஆண்டு நடந்த போலி என்கவுன்டர் வழக்கு: மாஜி போலீஸ் அதிகாரிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.