கேரளா: மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெப்பநிலை நிலவுவதால் கேரள மாநிலம் மூணாறு உறைபனியால் மூடப்பட்டுள்ளது. குளிர்ந்த சூழலுடன் மூணாறின் அழகு காண அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்து சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த மலை பகுதி கேரளாவில் உள்ள மூணாறு. அழகிய நிலப்பரப்பும், அதற்கேற்றாற்போல் சில்லென்று மிதமான சூழலும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த பகுதியாக மூணாறு உள்ளது.
இந்த நிலையில், கடத்த 2 ஆண்டுகளாக மூணாறில் பனிப்பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில், நடப்பாண்டு தட்பவெப்ப நிலை மைனஸ் 2 டிகிரியை தொட்டுள்ளது. பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்துள்ளதுடன், ஏறி உள்ளிட்ட நீர்நிலைகளில் பனியின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. கன்னி மலை, பேபி குளம், அருவி காடு உள்ளிட்ட இடங்களில் குளிர் நிலவுகிறது. இந்த இதமான சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர். மூணாறில் நிலவும் இதமான சூழலையும், அதன் அழகையும் ரசிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post 2 ஆண்டுகளுக்கு பிறகு மைனஸ் 2 டிகிரிக்கு சென்ற தட்பவெப்பநிலை: மூணாறின் அழகைக் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் appeared first on Dinakaran.