திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஆணுறுப்பின் மேல் சிக்கிய இரும்பு நட்டால் 2 நாட்களாக சிறுநீர் கூட சரியாக கழிக்க முடியாத அளவுக்கு வாலிபர் தவித்த சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள காஞ்சங்காடு பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் நேற்று இரவு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தார். தன்னுடைய ஆணுறுப்பின் மேல் ஒரு இரும்பு நட்டு சிக்கிவிட்டதாகவும் அதை வெளியே எடுக்க முடியவில்லை என்றும் டாக்டரிடம் அவர் கூறினார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர் உடனடியாக அந்த நட்டை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் நீண்ட நேரம் போராடியும் டாக்டரால் நட்டை அகற்ற முடியவில்லை. தொடர்ந்து டாக்டர் தீயணைப்புத் துறைக்கு போன் செய்து விவரத்தை கூறினார். தீயணைப்பு வீரர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அந்த நட்டு ஆணுறுப்பில் வலுவாக சிக்கியிருந்ததால் வேறு வழி இல்லாமல் கட்டரை பயன்படுத்தி அதை அறுத்து வெளியே எடுக்க தீர்மானிக்கப்பட்டது. கட்டரை பயன்படுத்தும் போது ஆணுறுப்பில் சூடு பரவும் என்பதால் அடிக்கடி தண்ணீரை ஊற்றி குளிர்விக்கப்பட்டது.
கடைசியில் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த நட்டை கட்டரால் அறுத்து வெளியே எடுத்தனர். அதன் பிறகே அந்த நபருக்கு நிம்மதி ஏற்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன் குடிபோதையில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், 2 நாள் சிறுநீர் கழிக்கக் கூட பெரும் அவதிப்பட்டதாகவும் அந்த நபர் கூறினார்.
The post 2 நாளாக ஆணுறுப்பில் சிக்கிய நட்டுடன் தவித்த ஆசாமி: கேரளாவில் பரபரப்பு appeared first on Dinakaran.