புதுடெல்லி: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு பிராந்திய கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பான வெளியிட்ட அறிக்கை: பிராந்திய கட்சிகள் மொத்தம் ரூ.216.75 கோடி நன்கொடை வசூலித்துள்ளன. இதில் பிஜூ ஜனதா தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு உட்பட 7 கட்சிகள் இந்த ஆண்டு நன்கொடைகளை பெறவில்லை என அறிவித்துள்ளன. சில கட்சிகளின் நன்கொடைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நன்கொடையானது 3685 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனநாயக ஜனதா கட்சியின் நன்கொடை 1,997 சதவீதம், தெலுங்கு தேசம் கட்சி 1,795 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சி, சிரோமணி அகாலிதளம் போன்ற கட்சிகளின் நன்கொடையானது கடுமையான சரிவை சந்தித்துள்ளது. முறையே 99.1 சதவீதம் மற்றும் 89.1 சதவீதமும் நன்கொடை குறைந்துள்ளது. அதிக நன்கொடை பெற்றவர்களின் பட்டியலில் பாரத ராஷ்டிர சமிதி முதலிடத்தில் உள்ளது. 47 நன்கொடைகள் மூலமாக ரூ.154.03 கோடியை கட்சி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஒய்எஸ்ஆர் கட்சியானது 5 பேரிடம் இருந்து ரூ.16கோடியை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியானது ரூ.11.92கோடியும் பெற்றுள்ளன.
The post 2022-2023ம் நிதியாண்டில் பிராந்திய கட்சிகளின் நன்கொடை ரூ.216 கோடி appeared first on Dinakaran.