மும்பை: 2024-25 நிதியாண்டில் அதிக வரி செலுத்தும் நடிகர்களில் அமிதாப் பச்சன் முதலிடம் பிடித்துள்ளார். ரூ.350 கோடி வருமானம் ஈட்டியதற்கு ரூ.120 கோடியை அமிதாப் பச்சன் வரியாக செலுத்தியுள்ளார். நடப்பு நிதியாண்டில் அமிதாப் பச்சனின் வருமான வரி, கடந்த நிதியாண்டை விட 69 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் அதிக வருமானவரி செலுத்தும் நடிகர்களில் அமிதாப் பச்சன் பிரபலமாகி உள்ளார்.
திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன். அசாத்திய நடிப்பு திறமையால் நாடு முழுக்க ரசிகர்களை கொண்ட அமிதாப் பச்சன் அதிக வரி செலுத்தும் இந்திய பிரபலம் எனும் பெருமையை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ரூ.92 கோடி வரி செலுத்தி ஷாருக்கான் முதலிடத்தில் இருந்தார். கடந்தாண்டு நான்காம் இடத்தில் இருந்த அமிதாப் பச்சன், தற்போது ரூ.120 கோடி வரி செலுத்தியதன் மூலம் ஷாருக்கானை விஞ்சி, முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
சல்மான் கான் ரூ.75 கோடி வரி செலுத்தி உள்ளார். வயதானாலும், அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைத்துறையில் அமிதாப் பச்சன் ஆதிக்கம் செலுத்துகிறார் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
The post 2024-25 நிதியாண்டில் அதிக வரி செலுத்தும் நடிகர்களில் முதலிடம் பிடித்தார் அமிதாப் பச்சன் appeared first on Dinakaran.