மும்பை: இந்த நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் 25 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் கையிருப்பு 879.59 டன்னாக அதிகரித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் எடுத்த பரஸ்பர வரி நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள வர்த்தக போர் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்த நிலையில், 2025ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ரிசர்வ் வங்கி தனது இருப்பில் 25 டன் தங்கத்தை சேர்த்துள்ளது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 879.59 டன் தங்கம் கையிருப்பு உள்ளது.
The post 2025 நிதியாண்டின் 2ம் அரையாண்டில் 25 டன் தங்கம் சேர்த்த ரிசர்வ் வங்கி appeared first on Dinakaran.