சென்னை: நடப்பு 2025 – 26 ஆம் ஆண்டில் வருவாய் உபரி சாத்தியமில்லை என்றும் 2030 ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் வாய்ப்பில்லை எனவும் அரசின் நேரடிக் கடன் ரூ.9.55 லட்சம் கோடி, மொத்தக் கடன் ரூ.15.05 லட்சம் கோடியாக உயரும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட உத்தேச பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி மேலாண்மையில் அரசுக்கு உதவும் வகையில் கடந்த 22 ஆண்டுகளாக நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சி, நடப்பாண்டு முதல் பொருளாதார ஆய்வறிக்கையையும் வெளியிடுகிறது. பாமகவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.