சில்வாசா: தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் உள்ள சில்வாசா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.2,587 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசும் போது,’ உடல் பருமன் பல நோய்களுக்கு மூலகாரணமாக உள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, 2050ம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 44 கோடி பேர் உடல் பருமனாக இருக்கலாம். இந்த ஆய்வறிக்கை உண்மையாக மாறினால், 2050ம் ஆண்டுக்குள் நாட்டில் ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படலாம். உடல் பருமன் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இந்த சூழ்நிலையை சமாளிக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். மக்கள் தங்கள் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளேன். 10 சதவிகிதம் குறைவாக எண்ணெய் வாங்குவீர்கள் என்று நீங்கள் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். வழக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை உடல் பருமனைக் குறைக்க உதவும்’ என்றார்.
The post 2050ம் ஆண்டுக்குள் 44 கோடி இந்தியர்கள் உடல் பருமனால் பாதிக்கப்படலாம்: பிரதமர் மோடி கருத்து appeared first on Dinakaran.