திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திலும், ரூ.300 டிக்கெட் நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் பெற்று தினமும் சுமார் 80 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவர்கள் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 75,104 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,896 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.66 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சிலா தோரணம் வரை நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரம் ஆகிறது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம்செய்தனர். சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு வைகுண்டம் காத்திருப்பு அறையிலும், தரிசன வரிசையிலும், பால், அன்னப்பிரசாதம் ஆகியவை ஆங்காங்கே வழங்கப்பட்டு வருகிறது.
The post 24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.