பரேலி: உத்தரப் பிரதேசத்தில் தம்பதியின் 25வது திருமண ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது கணவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த ஷூ வியாபாரி வாசிம் சர்வாத்துக்கும் (50), அவரது மனைவி ஃபராவுக்கும் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக பிலிபித் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஓர் இடத்தில் விருந்து நடந்தது. இந்த விருந்தில் தம்பதியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு சினிமா பாடல்களுக்கு மேடையில் ஆட்டம் போட்டனர்.
அப்போது தம்பதிகளும் உறவினர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். திடீரென வாசிம் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த ஃபராவும், அவரது உறவினர்களும் வாசிமை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்க அழைத்துச் சென்றனர். ஆனால் திடீர் மாரடைப்பு காரணமாக அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 25வது ஆண்டு திருமண விழாவில் கணவர் இறந்த சம்பவம் மனைவி மட்டுமின்றி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
The post 25வது ஆண்டு திருமண விழாவில் குத்தாட்டம் போட்ட கணவர் மரணம் appeared first on Dinakaran.