லாகூர்: பாகிஸ்தானில் 3 வெவ்வெறு சம்பவங்களில் 30 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பகுதியில் அமைந்துள்ள லக்கி மார்வத் மாவட்டத்தில் 18 தீவிரவாதிகளும், கராக் மாவட்டத்தில் 8 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், லக்கி மார்வத் மாவட்டத்தில் நடந்த மோதலில் ஆறு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தீவிரவாத தடுப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் லக்கி மார்வத் மாவட்டத்தில் 18 தீவிரவாதிகளும், கராக் மாவட்டத்தில் 8 தீவிரவாதிகளும் சேர்த்து மொத்தம் 26 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. லக்கி மார்வத் மாவட்டத்தில் நடந்த மோதலில் ஆறு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர்’ என்றனர்.
முன்னதாக தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3,000 கிராம் வெடிபொருட்கள், 11 டெட்டனேட்டர்கள், 22 அடி பாதுகாப்பு ஃப்யூஸ் கம்பி, தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன.
The post 3 வெவ்வெறு சம்பவங்களில் பாகிஸ்தானில் 30 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படை அதிரடி appeared first on Dinakaran.