புதுடெல்லி: டெல்லி சாணக்கியபுரியில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஐஎப்எஸ் அதிகாரி, அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து இந்திய வெளியுறவு சேவை (ஐஎப்எஸ்) அதிகாரி ஒருவர் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட ஐஎப்எஸ் அதிகாரியின் பெயர் ஜிதேந்திர ராவத் (40). அவரது வீட்டில் கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. மேலும் அவர் மன அழுத்தத்துக்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவருடன் அவரது தாய் தங்கி இருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அதிகாரியின் மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் டேராடூனில் தங்கி உள்ளனர்.
The post 4வது மாடியில் இருந்து குதித்து ஐஎப்எஸ் அதிகாரி தற்கொலை appeared first on Dinakaran.