பெங்களூரு: துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யாராவ் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர்.ஐ., தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கில் தங்கம் கடத்தல், பணமோசடி மற்றும் தங்க விற்பனை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த நவம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை, ரன்யா ராவ் நான்கு முறை, மொத்தம் 49.6 கிலோ தங்கத்தை துபாயிலிருந்து பெங்களூருக்கு கடத்தி வந்துள்ளார்.’ சாஹில் அந்த தங்கத்தை எல்லாம் ரூ.40.07 கோடிக்கு விற்றார், அதில் ரூ.38.35 கோடி ஹவாலா பணமாக துபாய்க்கு அனுப்பப்பட்டது. ‘‘சாஹிலிடம் நடந்த விசாரணையின் போது மீதமுள்ள ரூ.1.72 கோடி ரன்யா ராவுக்கு வழங்கப்பட்டதாக தெரியவந்தது” என்று வருவாய் புலனாய்வு துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
The post 4 மாதங்களில் 49.6 கிலோ தங்கம் கடத்திய ரன்யாராவ்: துபாய்க்கு ஹவாலா பணம் அனுப்பியதும் அம்பலம் appeared first on Dinakaran.