புதுடெல்லி: குழந்தைகளுக்கான ஆதார் அட்டை தகவல்களை, பெற்றோர் புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் ஐந்து வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவற்றை வைத்து ஆதார் எண் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஐந்து வயதை தாண்டும் போது ஆதாருடன் கருவிழி, கைரேகை பதிவுகளை இணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
ஐந்து முதல் ஏழு வயதுடைய குழந்தைகளை அருகில் உள்ள சேவை மையங்கள், தபால் நிலையங்கள், அரசால் அங்கீகரிக்கபப்ட்ட ஆதார் மையங்களுக்கு அழைத்துச் சென்று இலவசமாக இணைத்துக் கொள்ளலாம் என்றும், 7 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எண்ணுடன் கைரேகை, கருவிழி இணைக்காவிட்டால் ஆதார் அட்டை செயலிழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.