
பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, தலைநகர் பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் கடந்த செப்.25-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்று அதிபரானார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவின் அப்போதைய அதிபர் மாமர் கடாஃபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும், இதற்கு பிரதிபலனாக, தனித்துவிடப்பட்ட லிபியாவுக்கு சர்வதேச அரங்கில் பிரான்ஸ் ஆதரவாக செயல்படும் என நிக்கோலஸ் சர்கோசி உறுதி அளித்ததாகவும் தெரியவந்தது.

