நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் சேர்த்தது.