டெல்லி: அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு தலைவணங்குகிறேன் என கூறி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையை தொடங்கினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டோருக்கு மரியாதை தெரிவித்து குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அதில்,
*உலக புத்தாக்க மையமாக இந்தியா மாறும்.
*80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
*2047ல் வளர்ந்த பாரதம் என்ற நமது இலக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
*நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பங்களை நிறைவு செய்ய ஒன்றிய அரசின் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
*நாடு முழுவதும் தடையின்றி டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது.
*ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
*ஏழைகளின் கனவுகளை நனவாக்க ஒன்றிய அரசு பாடுபட்டு வருகிறது.
*80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
*நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
*மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
*ஒன்றிய அரசின் சீரிய நடவடிக்கைகளால் 25 கோடி ஏழைகள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.
*சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் முத்ரா கடன் தொகை ரூ.20 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
*கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையிலேயே உள்ளது.
*தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது.
*நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் செயல்பாட்டில் உள்ளன.
*அதிவேகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
*25 கோடி பேரை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளோம்
*நாட்டின் வளர்ச்சி அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது
*2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
*நாடு முழுவதும் விவசாயிகளுக்கு உதவித் தொகையாக ரூ.41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
*100-வது ராக்கெட் விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.
*ஒவ்வொரு இந்தியருக்கும் வளர்ச்சி என்பதே இலக்கு.
*ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருகிறது.
*அனைவருக்குமான வளர்ச்சி என்பது தான் ஒன்றிய அரசின் தாரக மந்திரம்.
*உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
*பெண்களின் தலைமையின் கீழ் நாட்டை அதிகாரம் செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது அரசு
*நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு நிர்ணயம்.
*வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.
The post 80% தள்ளுபடி விலையில் மருந்துகள்; ஏழைகளின் கனவுகளை நனவாக்க பாடுபடும் ஒன்றிய அரசு: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை appeared first on Dinakaran.