Category: இந்தியா

Indias latest news from all leading Tamil News Papers

பிரதமர் மோடியின் 63ஆவது வெளிநாட்டு பயணம்: நாளை ஐரோப்பா செல்கிறார்!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இதுவரை 62 முறை பல்வேறு உலக நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இறுதியாக 2021ஆம் ஆண்டில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை இத்தாலி, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார்.…

பெங்களூரை அடுத்து கேரளா.. தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்து வரும் நிறுவனங்கள்..!

பல்வேறு காரணங்களுக்காக வெளி மாநிலங்களில் இயங்கி வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டு இருக்கும் நிலையில், பெங்களூர் நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது கேரள நிறுவனம் ஒன்று தனது கேரள வர்த்தகத்தை மொத்தமாக மூடிவிட்டு தமிழ்நாட்டில் வர்த்தகத் தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இது…

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 3,324 பேருக்கு தொற்று..!!

புதுடெல்லி, நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் 3,688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 3,324…

சந்திரசேகர ராவுடன் கூட்டணியா? தெலுங்கானாவில் பிரசாந்த் கிஷோர் திடீர் முகாம்! ஐபேக் உடன் ஒப்பந்தம்..!

ஹைதராபாத் : பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியுடன் ஐபேக் நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்…

இந்தியாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் | உற்சாக வரவேற்பு முதல் அதானி சந்திப்பு வரை – அண்மைத் தகவல்கள்

அகமதாபாத்: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்ட போரிஸ் ஜான்சன் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதானியுடன் சந்திப்பு:…

இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்., அமோக வெற்றி! மக்கள் கொடுத்த பரிசு என மம்தா நெகிழ்ச்சி!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தலா ஒரு சட்டசபை, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ‛‛இது எனது ஆட்சிக்கு மக்கள்…

கே.எஸ். ஈஸ்வரப்பா ராஜினாமா: பாஜக தலைவர்களுக்கு இடையே உருவான லேட்டஸ்ட் மோதல்

பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை ஷிவமொக்காவிலிருந்து பெங்களூருக்கு 300 கிமீ பயணத்தைத் கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தொடங்குவதற்கு முன்னதாகவே, ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், அவரை ஏப்ரல் 12 ஆம்…

கமிஷன் கேட்ட கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா.. காண்ட்ராக்டர் தற்கொலையால் திருப்பம்!

பெங்களூரு: காண்ட்ராக்டர் தற்கொலை வழக்கு தொடர்பாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக பாஜக அமைச்சர் கேஎஸ் ஈசுவரப்பா கூறியுள்ளார். கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இவரது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து…

ஆந்திர பிரதேச மருந்து உற்பத்தி ஆலையில் தீ விபத்து.. 6 பேர் பரிதாப பலி.. 12 பேர் படுகாயம்!

ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியானார்கள். இதில் 12 பேர் காயம் அடைந்தனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அக்கிரெட்டிகுத்தேம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள மருந்து…

ஊழல் மந்திரியை காப்பாற்ற கர்நாடக முதல்-மந்திரி முயற்சி; காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெலகாவி, கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் இந்தலகா கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் பாட்டீல். காண்டிராக்டரான இவர், ஆளும் பா.ஜ.க.வில் தொண்டராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவர் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். இதனை தொடர்ந்து, போலீசார் பாட்டீலின் போனை…

ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது: எம்எல்ஏ செல்வபெருந்தகை

சென்னை: தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர்…

மோடிக்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி

இஸ்லாமாபாத்: தன்னை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் பாக். புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். பாகிஸ்தான் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் விலகினார்.இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள்…

உச்சம் தொடும் பணவீக்கம்: நடவடிக்கையில் இறங்க உள்ளது ஆர்.பி.ஐ.,

புது டில்லி: உணவுப் பொருட்களின் விலையேற்றத்தினால் நாட்டில் மார்ச் மாத சில்லறை பணவீக்கம் 6.95 சதவீதத்தை தொட்டுள்ளது. இது கடந்த 17 மாதங்களுக்கு பின் உச்ச நிலை ஆகும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்…

மோடி – பிடன் சந்திப்பு; ரஷ்ய போரால் ஏற்பட்ட விளைவுகளை நிர்வகிப்பது குறித்து பேச்சு

உக்ரைன் மக்களுக்கு இந்தியாவின் மனிதாபிமான உதவிகளை வரவேற்று, ரஷ்ய படையெடுப்பை “பயங்கரமான தாக்குதல்” என்று அழைத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் திங்களன்று, “இந்த ரஷ்யப் போரின் சீர்குலைவால் ஏற்பட்ட விளைவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமான…

இந்து கோயில் வாசலில் முஸ்லீம்கள் கடை வைக்கக் கூடாது.. பழக்கடைகளை சூறையாடிய ஸ்ரீராம் சேனா அமைப்பு

பெங்களூர்: இந்துக்களின் கோயிலுக்கு வெளியே முஸ்லீம்கள் கடை வைத்திருக்கக் கூடாது என கூறி கர்நாடகா மாநிலத்தின் ஸ்ரீராம் சேனா உறுப்பினர்கள் அவர்களது கடைகளை சூறையாடினர். கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் பிரச்சினை எழுந்தது. முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து…

இது தப்பு! கர்நாடகாவை வில்லனாக்கி.. எங்க முதலீட்டை பறிக்காதீங்க! தமிழ்நாடு பற்றி பொம்மை பரபர பேச்சு!

சென்னை: மத விவகாரங்களை காரணம் காட்டி கர்நாடகாவின் முதலீடுகளை தமிழ்நாடு தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தட்டி பறிப்பதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகாவில் நிலவி வரும் மத ரீதியான பிரச்சனைகள் காரணமாக அங்கு பொருளாதார ரீதியான பாதிப்புகள்…