சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z10x ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதே போனுடன் iQOO Z10 ஸ்மார்ட்போனும் வெளிவந்துள்ளது.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z10x ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.