கொல்கத்தா: மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. செல்லுலர் ஆபரேட்டர் அசோசியேஷன் சார்பில் மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கதிர்வீச்சல் பாதிப்பில்லை என்று அறியப்பட்டது.
‘மொபைல்போன் டவர்கள் மூலம் கதிர்வீச்சு பரவுவதாகவும், அதனால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் ஆதாரமற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அனைத்து விஞ்ஞானபூர்வமான சோதனைகளுக்கு பின்னர் மொபைல்போன் கதிர்வீச்சால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படாது என கண்டறியப்பட்டுள்ளது.
தினகரன்