வாஷிங்டன்: அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 % ஆக இருக்கும் என உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு ஆண்டுதோறும் 6.7% என நிலையாக இருக்கும்.
இந்த முன்னறிவிப்பு தெற்காசியாவின் மீட்சியில் இந்தியாவை ஒரு மீள் சக்தியாக நிலைநிறுத்துகிறது.இது வலுவான தனியார் நுகர்வு மற்றும் அரசு தலைமையிலான முயற்சிகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. தெற்காசிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சிப் பாதை தனித்துவமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* எதிர்பார்த்ததை விட இந்தியாவின் வளர்ச்சி குறைந்துள்ளது: ஐ.எம்.எப் தகவல்
தொழில்துறை நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட கடும் வீழ்ச்சியால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கூறுகையில்,’ உலகப் பொருளாதாரம் சீராக உள்ளது.
2023ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருந்தது. 2024ல் 6.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த நிதியாண்டும் 6.5 சதவீதமாகத்தான் இருக்கும். 2026ம் ஆண்டும் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு appeared first on Dinakaran.