திருமலை: ஆந்திராவில் அடுத்தடுத்து ஜாமீனில் வந்து 3 மூதாட்டிகளை சைக்கோ வாலிபர் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பெதானந்திபாடு கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு(40). இவர் கடந்த 2023ம் ஆண்டு 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் சிறைக்குச் சென்றார். அந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு 2024ல் மீண்டும் 75 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தார். இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அந்த மூதாட்டியும் இறந்தார். இந்த வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட மஞ்சு கடந்த 1ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தான்.
இந்நிலையில் அதேபகுதியில் வசித்து வரும் ரமணம்மா(64) என்ற மூதாட்டி அங்குள்ள கோயிலில் தூய்மை பணி மேற்கொண்டு வந்தார். அவரது மகளுக்கு திருமணமாகிவிட்டதால், ரமணம்மா வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 1ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த மஞ்சு அன்றிரவு சைக்கோ போன்று ரமணம்மா வீட்டின் அருகே சுற்றித்திரிந்துள்ளார். பின்னர் இரவு வீடு புகுந்து மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பி சென்றான். கடந்த 2ம் தேதி ரமணம்மா கோயிலுக்கு பணிக்கு வராததால் நிர்வாகத்தினர் அவரது மகளிடம் கேட்டனர்.
இதனைதடுத்து அவரது மகள் சென்று பார்த்தபோது, குடிசையில் தாய் இறந்து கிடப்பதைக் கண்டார். உடலில் ரத்தக் காயங்களும், யாரோ கடித்து வைத்திருந்த பல் அடையாளங்களும் காணப்பட்டன. இதனையடுத்து பிரதிபாடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சைக்கோ கொலையாளி மஞ்சு அப்பகுதியில் சுற்றித்திரிந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அருகிலுள்ள பகுதியில் சுற்றித்திரிந்த மஞ்சுவை போலீசார் மடக்கி விடித்து விசாரித்தனர். இதில் மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக மூதாட்டிகளை பலாத்கார கொலை செய்யும் சைக்கோ குற்றவாளி மஞ்சுவிற்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
The post அடுத்தடுத்து ஜாமீனில் வந்து சம்பவம் 3 மூதாட்டிகளை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ: ஆந்திராவில் பரபரப்பு appeared first on Dinakaran.